இலங்கையின் நிலை மோசம்! போக்குவரத்து இன்மையால் பச்சிளம் குழந்தை பலி!!

banner

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவமானது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





ஹல்தும்முல்லை பகுதியில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.





தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.





இதனையடுத்து குழந்தையை, உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்கவில்லை.





குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது.





அவர்களின் வீட்டிலிருந்து ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.





எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ ஒன்றைத் தேடிக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.





அந்த ஒருமணிநேரம் தாமதம் ஏற்படாது போயிருந்தால் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள முடிந்திருக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.