இலங்கையில் கடும் நெருக்கடி - வெளிநாடு செல்வோர் தொகை 286 வீதத்தால் அதிகரிப்பு!

banner

2022 இல் முதல் ஐந்து மாத காலப்பகுதிக்குள் ஒரு லட்சத்தூ5 ஆயிரத்து 823 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.





2021ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்துடன் ஒப்பிடும்போது இது 286 சதவீத அதிகரிப்பு என குறித்த பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.





கடந்த வருடம் முதல் 5 மாதங்களுக்குள் 27,360 பேர் மாத்திரமே தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.





இக்காலகட்டத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக பெருந்தொகையானோர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்யும்போது பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவிக்கின்றது.





இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பலர் வெளிநாடு செல்வதை காணமுடிகின்றது.