கந்தகாடு முகாமிலிருந்து 600 பேர் தப்பியோட்டம்! தேடுதல் வேட்டை ஆரம்பம்!!

Sri Lanka 1 வருடம் முன்

banner

போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 500 இற்கும் மேற்பட்டோர் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கொழும்பு, மோதரை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இன்று காலை 8 மணியளவில் சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பிச்சென்றுள்ளனர்.
தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபட்டுவருகின்றனர்.

புனர்வாழ்வு முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்மீது இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும், நுழைவாயிலை உடைத்துக்கொண்டே வெளியேறியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.