சிலாபம் பகுதியில் 72 வயதான திருமணமாகாத வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனை தேடி, சி. சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி அதிகாலை இந்த பெண் தனியாக குடியிருந்த வீட்டுக்குள் நுழைந்த நபரொருவர், அவர் நித்திரையில் இருக்கும் போதே முகத்தில் ஏதோ ஒரு பொருள் ஒன்றை பிடித்துள்ளார்.
இதனால் தான் மயங்கியதாகவும், அதன் பின்னர் தனக்கு என்ன நடந்தது என தெரியாதெனவும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது உடம்பில் வலி காணப்பட்டதாகவும், கட்டிலிலும் நிலத்திலும் இரத்தக்கறை காணப்பட்டதாகவும் அந்தப் பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் குறித்த வயோதிபப் பெண்ணை சிலாபம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
வைத்திய பரிசோதனையில் இந்தப் பெண் முதல் முறையாக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்ததில் சந்தேக நபர் 20 இற்கும் 25 வயதுக்குமிடைப்பட்டவர் என பொலிஸார் இனம் கண்டுள்ளனர்.