எரிபொருள் வரிசை மோதல் தொடர்கிறது - இராணுவ சிப்பாய்மீது வாள்வெட்டு!

banner

எம்பிலிப்பிட்டிய நூறாவது மைல்கல் அருகேயுள்ள எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றையடுத்து , இராணுவ சிப்பாய் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.





குறித்த மோதல் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.





கதுறுகஸ்ஆர இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு வெட்டு காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.





இந்த சம்பவம் தொடர்பாக எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.