பொரளை டிக்கல் வீதியிலுள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர் வாகனத்துக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
அங்கொட,கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த சுஜிவ விகும் குணரத்ன (60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் கடந்த 4 ஆம் திகதி இரவு, எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகனத்தில் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது என பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.