வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடித்த 15 பேருக்கு தண்டப்பணம்

Sri Lanka 1 வருடம் முன்

banner

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் அனுமதிக்கப்படாத இரவு நேரத்தில் வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடித்த 15 பேருக்கு தலா பத்தாயிரம் மற்றும் பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.





கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் அனுமதிக்கப்படாத இரவு நேரத்தில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.





கிளிநொச்சி நாச்சிகுடா கடற்பரப்பில் சட்டத்துக்கு முரணான வகையில் அனுமதிக்கப்படாத இரவு வேளைகளில் வெளிச்சம் பாச்சி கடலட்டை பிடித்த 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.





இவர்களை நேற்று (01.-08.-2022) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது ஒருவருக்கு 15,000 தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.





இதேவேளை தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது.