அநுராதபுரம் நகரில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக, பூட்டப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களை திருடியதாக கூறப்படும் பெண்ணொருவரை, அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம், புபுதுபுர என்ற இடத்தைச் சேர்ந்த 34 வயதான ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சந்தேக நபரான இப் பெண் திருடியதாக கூறப்படும் 12 சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு திருடப்படும் சைக்கிள்களின் நிறத்தை மாற்றி வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தப் பெண்ணின் கணவர் போதை வஸ்துக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.