அகதியாக சென்றவர் எம்.பியான கதை

Politics 3 ஆண்டுகள் முன்

banner

ஐந்து ஆண்டுகளாக அகதிகள் முகாமில் இருந்த ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த இப்ராகிம் ஒமர் என்பவர் இன்று நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.





நியூசிலாந்தின் தொழிற்கட்சி வேட்பாளராக களமிறங்கிய அவர், வெற்றிவாகைசூடி - அந்நாட்டின் முதல் ஆபிரிக்க தேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.





எரித்திரியா நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையால் புலம்பெயர்ந்து, சூடானில் இருக்கும் அகதிகள் முகாமுக்கு 2003 ஆம் ஆண்டு ஒமர் வந்தடைந்தார். அங்கிருந்த ஒமருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு அடைக்கலம் கொடுத்தது.





தனது வாழ்க்கை குறித்து sbs செய்தி சேவைக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,





" அரசியல்வாதியாகவேண்டும் என்பதே சிறுவயது முதல் எனது இலட்சியமாக இருந்தது. எனினும், அதற்காய வாய்ப்புகள் எதிரித்தியாவில் இருக்கவில்லை.





2000ம் ஆண்டு காலவரையறையற்ற இராணுவ சேவையில் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்டேன். பயிற்சிகளை முடித்த பின்னர் 2003 ஆம் ஆண்டு - அதாவது அகதி முகாம் வரும் வரை எதியோப்பிய எல்லையில் கட்டயப்படுத்தலின் பேரில் காவல் நின்றேன்.





சூடான் அகதி முகாமில் இருந்தவேளை அந்நாட்டு அதிகாரிகள், என்னை எதித்திரியாவின் உளவாளியெனக் கருதி மீண்டும் எதித்திரியாக்கு அனுப்ப முயற்சித்தனர். அதற்குள் ஐக்கிய நானுகளுக்கான அகதிகள் அமைப்பு தலையிட்டு என்னை நியூசிலாந்தில் குடியேற்றம் செய்தது.





நியூசிலாந்து வந்த பின்னர் எனக்கு கல்விக்கற்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எதித்திரியாவில் எனது குடும்பம் இருந்தது. அவர்கள் வறுமையில் இருந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டும். ஆகையால் முதன் முதலில் குறைந்த வேதனத்துக்கு துப்பரவு பணியாளரானேன்.





அதன் பின்னர் 2014 ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தல் பிரச்சார மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தது. அதில், “ உங்களை போலவே கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இந்த நாட்டில் புதிதாக ஒன்றை தொடங்குவதால் பல தடைகள் உள்ளன. கற்றுக்கொள்ளவோ நல்ல எதிர்காலத்தை உருவாக்கவோ கடினமாக உள்ளது.” என்றவாறு உரையாற்றியிருந்தேன்.





இந்த பிரச்சாரத்தில் பல அரசியல் வாதிகள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எனது உரை பிடித்திருந்தது.
அவர்கள் எனக்கு ஊக்கமளித்தனர். “Power built training “ பாடத்தில் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த பயிற்சி நெறியை முடித்த பின்னர் வாழ்க்கை நடைமுறை மாற்றம் பெற்றது. " - என்றார்.