கம்மன்பிலவுக்கு பொறி வைப்பு - கூட்டமைப்பு ஆதரவு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.





ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது.





கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின்னர் சஜித் பங்கேற்கும் முதல் அரசியல் சந்திப்பு இதுவாகும். இக்கூட்டத்தின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.





குறிப்பாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை திணிக்கும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதனை மையப்படுத்தியே வலுசக்தி அமைச்சருக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.





நாடாளுமன்றம் எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது மேற்படி பிரேரணை கையளிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.





இப்பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கவுள்ளன.





அரச பங்காளிக்கட்சியான இ.தொ.கா எதிராக வாக்களிக்கவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாக வாக்களிக்கும் என தெரியவருகின்றது.