எதிர்க்கட்சிகளிடம் கரு விடுத்துள்ள அவசர கோரிக்கை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" நாடு இருண்ட யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எனினும், இதிலிருந்து மீள்வதற்கு எமக்கு மற்றுமொரு வாய்ப்பும் உள்ளது. ஒற்றுமையே அதற்கான வழியாகும்." - என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார்.





" இருண்டயதொரு யுகத்தையே நாம் கடந்துகொண்டிருக்கின்றோம். அந்த யுகத்தில் இருந்து மீள்வதற்கு எமக்கு மற்றுமொரு வாய்ப்பும் உள்ளது. ஐக்கியமே அதற்கான வழி. வரலாற்றில் என்றுமில்லாதவாறு அந்த ஐக்கியம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமை மூலம் அநீதிக்கு எதிராக எந்தவொரு தரப்பையும் எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். " - என்றும் கருஜயசூரிய தெரிவித்தார்.





அதேவேளை, " ஜனநாயகத்துக்காகவும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் நாம் ஒன்றுபட வேண்டும். நாடு பொலிஸ் இராஜ்ஜியத்தை நோக்கி நகர்வதை தடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். அதற்கான போராட்டத்தில் நாம் அனைவரும் கரம்கோர்த்து செயற்பட வேண்டும்." - என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.





" அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனில் நாம் ஒன்றிணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தோம். எனவே, ஜனநாயகத்துக்காகவும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஐக்கிய தேசியக்கட்சி முன்னின்று செயற்படும். " - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.