இந்தியாவின் அழுத்தத்தாலேயே தேர்தல் - வெளியானது தகவல்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

” இந்தியாவின் அழுத்தத்தின் பிரகாரமே மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசு தயாராகின்றது. எனினும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோலவே வெளிவிவகார அமைச்சர் அறிவிப்புகளை விடுத்துவருகின்றார்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.





ஹட்டனில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி. இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





” ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அரச இணக்கம் தெரிவித்துள்ளது. பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்குவந்து சென்ற நிலையிலேயே தேர்தலுக்கான அறிவிப்பு அரச தரப்பில் இருந்து வந்துள்ளது. எனினும், எந்த நாடடுக்கும் அடிபணியவில்லை, தாமக முன்வந்தே தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகிவருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துவருகின்றார்.





இலங்கைக்கான இந்திய தூரதகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் பீரிஸ் கருத்துகளை வெளியிட்டுவருகின்றார்.





மாகாணசபைகளுக்கு தேர்தல் நடைபெறுவதை நாமும் வரவேற்கின்றோம்.” – என்றார்