'எரிபொருள் விலை ' - கோட்டா பிறப்பித்துள்ள கட்டளை

banner

எரிபொருளின் விலையை தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.





நேற்றைய தினம் (11) கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, பெற்றோலிய கூட்டுதாபனம் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினைகள் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.





உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி ஆகிய குறித்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவைக்கு தெளிவூட்டியுள்ளார்.





விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, இந்த தருணத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும், எரிபொருளுக்கான நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.