'மாகாணத் தேர்தல்' - ஊதப்பட்டது முதலாவது அபாய சங்கு

banner

“இலங்கையை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகவா இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் எதற்கு ” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஓமல்பே சோபித தேரர்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





“மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போலவே, கடும் நெருக்கடியான சூழ்நிலையில், பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது.





இக்கட்டான சூழ்நிலையில் யாரின் தேவைக்காக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது? தேர்தலை நடத்துவதற்கான பொருளாதார பலம் தற்போது நாட்டில் இல்லை.





இந்தியாவின் தேவைக்காகவா மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது என்ற வினா எழுகின்றது. இலங்கையானது இந்தியாவின் மற்றுமொரு மாநிலம் என்றா ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர்.” – என்றார்.