ஆளுங்கட்சியினர் கொழும்பில் முகாமிட்டு மந்திராலோசனை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" பெருந்தோட்டத்துறைக்கு இரசாயன உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் மாத்திரமே அரசு ஒரு அடி பின்வாங்கும்." - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.





ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.





இதன்போது உரப்பிரச்சினை தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.





சந்திப்பு முடிவடைந்த பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,





" பெருந்தோட்டத்துறைக்கு இரசாயன உரம் வழங்கப்படும்."- என்றார்.





அத்துடன், கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் இன்றைய சந்திப்பில் பங்காளிக்கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.