கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நல்லாட்சி சகாக்கள்

banner

" இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன். மத்தியசெயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று வடமேல் மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே அறிவித்தார்.





அதிபர் - ஆசிரியர்களின் போராட்டத்தை விமர்சித்திருந்த ராஜா கொல்லுரே, போராட்டம் தொடர்ந்தால் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என அறிவிப்பு விடுத்திருந்தார்.





அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்தன. கம்யூனிஸ்ட் கட்சியே போர்க்கொடி தூக்கியது.





இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசெயற்குழு இன்று கூடியது. இதன்போது தவிசாளர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் இந்த முடிவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ராஜா கொல்லுரே,





" நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய சிலர் இன்னும் கட்சிக்குள் இருக்கின்றனர். அவர்களின் தேவைக்கேற்பவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். கட்சியில் இருந்து நான் விலகமாட்டேன்." -என்றார்.