மஹிந்தவின் கோரிக்கைக்கு உடன் தீர்வை வழங்கிய சீன அமைச்சர்

banner

தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு காத்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்கு சீனாவிற்கு வருகைத்தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, சீன வெளிவிவகார அமைச்சரிடம், பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்க விடுத்துள்ளார்.





பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (09) சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயை அலரி மாளிகையில் சந்தித்தபோதே இந்த கோரிக்கையை விடுத்தார்.





இதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யீ , இலங்கையின் மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் அங்கு வருகைத்தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு உடனடியான அறிவுறுத்தினார்.





சீனாவின் மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்த 400 மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 1200 இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.





கொவிட் தொற்று நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுக்கு மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு முடியாது போயுள்ளது.





பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்தார்.