'இலங்கையில் பத்திரிகைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியது டொலர் தட்டுப்பாடு'

Politics 2 ஆண்டுகள் முன்

banner

பத்திரிகைகளை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையில் பத்திரிக்கை தொழிற்துறையினர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.





டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என பத்திரிக்கை தொழிற்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.





இதன்காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது, 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





செய்தித்தாள்களின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதால் ஒரு சில பத்திரிகைகள் கட்டண அதிகரிப்பை செய்துள்ளன. மேலும் சில பத்திரிகைகள் விரைவில் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.