'நிலைமை மிக மோசம்' - எச்சரிக்கை விடுத்தார் சுமந்திரன்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

நாட்டின் நிதி நிலமை மிகமோசமான கட்டத்தினை அடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" நாங்கள் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படப்போவதாக முன்பே அறிவிப்பினை செய்துள்ளோம். அப்போது அரசு அதனை மறுத்தது.சில மாதங்களுக்கு முன்னர் விவசாய அமைச்சின் செயலாளர் இதனை சொன்னபோது அவரை பதவியில் இருந்து விலக்கினார்கள். இப்போது அரசேஅதனை சொல்ல ஆரம்பித்து விட்டது.





விவசாய அமைச்சர் தன்னுடைய 32 வருட அரசியல் வாழ்க்கை பாழாய் போய்விட்டுள்ளதாக சொல்கின்றார். நாட்டின் நிதி நிலைமை மிக மோசமடைந்துள்ளது. இது இந்த மாத முடிவிற்குள் இன்னும் மோசமான நிலையினை அடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





வடக்கிலும் கிழக்கிலும் எங்கள் மக்கள் நிலத்தினையும் கடலினையும் நம்பி வாழ்பவர்கள். அதன் காரணமாகவோ என்னவோ நாட்டில் மற்றப்பிரதேசங்களை விட எங்களுக்கு இதன் தாக்கம் என்பது சற்று தாமதித்து வரலாம். ஆனால் ஏற்கனவே ஏனைய மாகாணங்களில் மக்கள் பட்டினியின் விளிம்பிற்கு வந்துவிட்டார்கள்.





எங்கள் மாவட்டங்களில் அது வருகின்ற பொழுது வரப்போகும் பஞ்ச காலத்தில் எங்களிடம் இருக்கும் அனைத்தினையும் அனைவரிடத்திலும் பகிர்ந்து உண்கின்ற நிலை வந்துள்ளது. அதனால்தான் பகிர்ந்து உண்போம் என்கின்ற தொனிப்பொருளை மக்களிடத்தே கொண்டுசெல்கின்றோம் என அவர் தெரிவித்தார்.