சுதந்திரத்துக்கு பிறகு முதல் தடவையாக நாடு வங்குரோத்து!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளே, புதிய அரசமைப்பை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அரசும் அரசமைப்பு விடயத்தில் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. எனவே, புதிய அரசமைப்யை இயற்றுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.





இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.





ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் சார்பில் இந்த கோரிக்கையை எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல முன்வைத்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" அரசமைப்பை இயற்றும் நடவடிக்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது உங்களுக்கும் (சபாநாயகருக்கும்) தெரியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாடும் சட்டத்தரணிகள், புதிய அரசமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 20ஆவது திருத்தச்சட்டமும் இவ்வாறுதான் நிறைவேற்றப்பட்டது. இறுதிவரை எமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.





புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி உரையாற்றினார். புதிய அரசமைப்பை வெளியில் தயாரித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமல், அந்த பணியை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.





அதேவேளை, 1948 இல் இருந்து இந்நாட்டை அரசுகள் ஆட்சி செய்துள்ளனர். இம்முறைதான் நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. " - என்றார்.