'டீல்' அரசியல் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

banner

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 'டீல்' அரசியலுக்கு இடமில்லை. தனிநபர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் செல்வாக்கு செலுத்த முடியாது. கொள்கைகளின் அடிப்படையிலேயே செயற்பாடுகள் இடம்பெறும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" மக்களை எப்படியெல்லாம் வதைக்கு முடியுமோ அந்தளவுக்கு துன்பங்களை அள்ளி வழங்கியுள்ளது இந்த அரசு. வாழ்க்கைச்சுமை உச்சம் தொட்டுள்ளது. சந்தைக்குச்சென்றால் பொருட்களின் விலைகளை காணும்போது இரத்தம் கொதிக்கின்றது. மறுபுறத்தில் மத்திய வங்கியோ தொடர்ச்சியாக பயணத்தை அச்சிட்டுவருகின்றது. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.





இந்த அரசுக்கு மக்கள் பற்றி துளியும் கவலை இல்லை. தமக்கான பாதுகாப்பு மற்றும் தமது சகாக்களின் பாதுகாப்பு என்பனவே ஆட்சியாளர்களுக்கு முக்கியம். அதனால்தான் மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.





எமது ஆட்சியில் அரசியல் 'டீலுக்கு' இடமில்லை. மக்களின் கொள்கையுடன்தான் எமக்கு 'டீல்' இருக்கும். தேசிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் ஆட்சி இடம்பெறும். தனிநபர்களின் செல்வாக்குக்கு இடமில்லை. பலமான சக்தியாக அடுத்து நடைபெறும் தேர்தல்களில் வெற்றிபெறுவோம். - என்றார்.