ஆஸ்திரேலியாவிடமும் கையேந்துகிறது இலங்கை

banner

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிடம் இருந்தும் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக கோரியுள்ளது.





இது தொடர்பான வேண்டுகோளை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ளார்.





பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்பட்டுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.





இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளது. அத்துடன், சீனாவிடமும் 2.5 பில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளது. இந்நிலையிலேயே ஆஸியிடமும் கடன் கோரப்பட்டுள்ளது.