போரில் அழிந்த உக்ரைன் நகருக்கு கனடா பிரதமர் ரூடோ திடீர் விஜயம்

Politics 1 வருடம் முன்

banner

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ உக்ரைன் மீதான படையெடுப்பின் ஆரம்பத்தில் பலத்த அழிவுகளைச் சந்தித்த இர்பின் (Irpin) நகருக்குத் திடீர் விஜயம்செய்து சேதங்களைப் பார்வையிட்டிருக்கிறார். முன்கூட்டியே அறிவிக்கப்படாத அவரது இந்த ரகசிய விஜயம் தொடர்பான தகவலை அந்த நகரின் முதல்வர் ரெலிகிராம் சமூக ஊடகச் செய்தித் தளத் தில் வெளியிட்டிருக்கிறார்.





1949 இல் நேட்டோ அமைப்பை ஸ்தாபித்த 12 நிறுவக நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். போர் ஆரம்பித்தது முதல் உக்ரைனுக்கு 118 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளைக் கனடா வழங்கியிருக்கிறது.





இதேவேளை - ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாளை நினைவு கூரும் வைபவங்கள் நடைபெற்றுள்ளன.





ஐரோப்பா மீண்டும் ஒரு போரைச் சந்தித்துள்ள பின்னணியில் இன்றைய வெற்றி நாள்நிகழ்வுகளில் உக்ரைன்நிலைவரமே பெரிதும் கவனத்தை ஈர்த் திருக்கிறது.





1945 இல் ஜேர்மனிய நாஸிக்களை வெற்றி கொண்டதைப்போலவே இம் முறையும் போரில் ரஷ்யாவே வெற்றிபெறும் என்று அதிபர் விளாடிமிர் புடின்தனது செய்தியில் தெரிவித்திருக்கிறார்.





"இன்று எங்கள் போர் வீரர்கள் அங்குள்ள
மூதாதையர்களுடன் தோளோடு தோள் நின்று சொந்த நிலத்தை நாஸிக்களிடம் இருந்து மீட்கப் போராடிக்கொண்டிருக் கிறார்கள். 1945 இல் ஈட்டியதைப் போலஇந்தப் போரிலும் வெற்றி நமதே"-என்றுபுடின் கூறியிருக்கிறார்.





போரின் வெற்றியைக் குறிக்கின்ற பிரமாண்டமான படை அணிவகுப்பு தலைநகர் மொஸ்கோவில் திங்கட்கிழமை நடைபெறுகிறது. அந்த விழாவில் அதிபர்புடின் ஆற்றவுள்ள உரையில் நாட்டுக்கும் உலகிற்கும் என்ன செய்தியை அறிவிக்
கப்போகிறார் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன.





உக்ரைனின் மரியுபோல் நகரம் மீது இறுதித் தாக்குதல் எந்த நேரமும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அமைந்துள்ள பாரிய இரும்புத்தொழிற்சாலையின் உள்ளே பல வாரங்களாகத் தஞ்சமடைந்திருந்த சிவிலியன்
களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. நகரைபாதுகாப்பதற்காக இரும்புத் தொழிற்சாலைக்குள் இன்னமும் நிலைகொண்டிருக்கும் உக்ரைன் படையினர் இறுதிவரைசண்டையிடப்போவதாக அறிவித்திருக்
கின்றனர்.





மரியுபோல் நகரின் பெரும்பகுதிகள் ரஷ்யப் படைகள் வசம் வந்துவிட்டபோதிலும் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த அந்த இரும்புத் தொழிற்சாலைநகரைக் காக்கின்ற கவசமாகத் தொடர்ந்தும் உக்ரைன் படைகளது கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.





இதற்கிடையில் படையெடுப்பின் 74 ஆவது நாளாகிய இன்று உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பாடசாலை ஒன்றின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியுள்ளது.அதனால் அங்கு தஞ்சமடைந்திருந்த சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.





பாரிஸிலிருந்து குமாரதாஸன்