'ரணில் விக்கிரமசிங்க, ரணில் ராஜபக்ச ஆன கதை இதோ...'

banner

" ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அவரை ரணில் விக்கிரமசிங்க என விளிப்பதைவிட, ரணில் ராஜபக்ச என கூறுவதே பொருத்தமாக இருக்கும்."





இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன விளாசித்தள்ளியுள்ளார்.





கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.





" கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்சக்களை விரட்ட வேண்டும் என மக்கள் போராடிவரும் நிலையில், மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் அவர்களை பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்க களமிறங்கியுள்ளார். அவர் ரணில் விக்கிரமசிங்க அல்லர். ராஜபக்ச என்றே விளிக்க வேண்டும். இவர்களின் ஆட்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதனால்தான் ரணில்கோ கிராமமும் அமைக்கப்பட்டுவிட்டது.





மக்களால் நிராகரிக்கப்பட்டு, தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த ரணிலை பிரதமராக்கிறது தவறு. மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." - என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.