ரணிலுக்கு எதிராக 'நோ டீல் கம' உதயம்!

Politics 1 வருடம் முன்

banner

பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அலரிமாளிகைக்கு முன்பாக 'நோ டீல் கம' (NO DEAL GAMA) உருவாக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என வலியுறுத்தி அலரிமாளிகைக்கு முன்பாக 'மைனா கோ கம' என்ற பெயரில் கிராமமொன்று உருவாக்கப்பட்டு, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார். இது 'அரசியல் டீல்' என விமர்சிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, ரணிலுக்கு எதிராகவும் கிராமமொன்று உதயமாகியுள்ளது.

அதேவேளை, கோட்டாகோகமவிலும் போராட்டம் தொடர்கின்றது. இன்று 35 ஆவது நாளாக இடம்பெறுகின்றது.