ரணில் 'டபள்கேம்' - சபையில் சஜித் சாட்டையடி

banner

மே - 09 தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.





தமது கட்சி வன்முறையை ஆதரிக்காது என்பதால், மே 09 ஆம் திகதி நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அலரிமாளிகையில் இருந்தே வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.





ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என கூறியிருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமரான பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இதன்மூலம் அவரின் இரட்டை அரசியல் நிலைப்பாடு தென்படுகின்றது எனவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.





நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.