இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு அடி - முன்பதிவுகள் ரத்து

Politics 1 வருடம் முன்

banner

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.





சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.





" இதன்படி 35 முதல் 40 வீதமான வெளிநாட்டவர்கள் இவ்வாறு தங்களது முன்பதிவுகளை இரத்து செய்துள்ளனர்.





நாட்டில் நிலவும் மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.





முன்பதிவு செய்தவர்கள் அதனை இரத்து செய்திருப்பது நாட்டிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்." எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.