கனடா நாடாளுமன்றில் இனப்படுகொலை தீர்மானம் - இலங்கை கடும் சீற்றம்

Politics 1 வருடம் முன்

banner

கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை இலங்கை நிராகரித்துள்ளது.





கனேடிய நாடாளுமன்றத்தில் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.





இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் மற்றும் மே 18ஆம் திகதியை இனப்படுகொலையாக அங்கீகரித்துள்ளது.





இனப்படுகொலை என்ற அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இலங்கை தொடர்பான நாடாளுமன்ற பிரேரணை, உத்தியோகபூர்வ கருத்துக்கு முரணாகவுள்ளது.





கனேடிய அரசாங்கம், இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை. இலங்கை, கனேடிய அரசாங்கத்திற்கு உண்மையான நிலைமை தொடர்பாக உயர் மட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.





இந் நிலையில், இலங்கை அதன் நல்லிணக்க செயல்முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.





அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி கனேடிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது. இனப்படுகொலை என்ற வார்த்தைக்கு குறிப்பிட்ட சட்டபூர்வ அர்த்தங்கள் இருப்பதாகவும் அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.