'புலிகளையும் நினைவுகூர வேண்டும்' - ஆளுங்கட்சி எம்.பி. கோரிக்கை

banner

" போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இளைஞர்களையும் நினைவுகூர வேண்டும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற டிலான் பெரேரா தெரிவித்தார்.  
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 
" போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் நாள் இன்று (19).  படையினரை நினைவு கூர்ந்து அவர்களை கௌரவப்படுத்தும் அதேவேளை,  தவறான வழியிலேனும் பயணித்து புலிகள் அமைப்பில் இணைந்த தமிழ் இளைஞர்களையும் நாம் நினைவுகூர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. 
இடைக்கால அரசமைக்குமாறு நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தினேன். ஆனால் புதிய பிரதமரை தெரிவுசெய்ய இந்நாட்டில் வன்முறை இடம்பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. மஹிந்த ராஜபக்ச மே 09 ஆம் திகதி காலை 9 மணிக்கு பதவி விலகியிருந்தால்கூட இப்பிரச்சினை ஏற்பட்டிருக்காது. எனவே, மே 9 சம்பவத்துக்கு அவரும் பொறுப்பு கூறவேண்டும். " - என்றார்.