வட்டி பணத்தால் வந்த வினை - குடும்பஸ்தர் தற்கொலை!

Politics 1 வருடம் முன்

banner

களுத்துறை, கமகொட ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார்.

தனது வீட்டில் அவர் நேற்று தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டிக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் களுத்துறை, கமகொட, ஹொரதுவாவத்தையைச் சேர்ந்த நதோஷ் குமார ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும் அவர்களில் இருவர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி அண்மையில் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் களுத்துறையில் கடலை வியாபாரியாக தொழில் செய்து வந்ததாகவும், அவருக்கு கிடைத்த சுனாமி வீட்டையும் கடன் காரணமாக வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

களுத்துறை நாகொட திடீர் மரண விசாரணை அதிகாரி சுமித் சில்வா முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.