• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

கோட்டாவின் அதிகாரங்களை குறைத்து பஸிலுக்கு ஆப்பு வைக்கும் ’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தயார்!

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
May 20, 2022

” அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் முன்வைக்கப்படும்.” – என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமானம் செய்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பிற்பகல் வேளையில் நீதி அமைச்சில், தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்காக 21 ஆவது திருத்தச்சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

” 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனநாயக முறைமை ஏற்படுத்தப்பட்டது. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அது இல்லாது செய்யப்பட்டது. எனவே, அரசமைப்பில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.” – என்றும் விஜயதாச குறிப்பிட்டார்.

’19’ இன் நிலை மீண்டும் ஏற்பட்ட பிறகு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறைமை பலப்படுத்தப்படும்.

உயர்பதவி நியமனங்களுக்கான அரசியலமைப்பு பேரவை மீள ஸ்தாபிக்கப்படும். ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பது தடைபடும்.

அதேவேளை, இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இரட்டை குடியுரிமை உடைய பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக இந்த சரத்து 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டது. பஸில் எம்.பியானார். அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.

தற்போது 21 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ‘இரட்டை குடியுரிமை’ தடை மீள அமுலாகும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பஸில் ராஜபக்சவின் எம்.பி. பதவியும் பறிபோகும் நிலை ஏற்படும்.

2015 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்க, 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரட்டை குடியுரிமை உடையவர் என்பதால், உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக எம்.பி. பதவியை இழந்தார். அதே நிலை பஸிலுக்கு ஏற்படும் என்பதே நீதி அமைச்சரின் தர்க்கமாகும்.

ஆர்.சனத்

Related

பரிந்துரை

இலங்கையில் ஆட்டம்காணும் சுற்றுலாத்துறை

3 days ago

பட்டினி சாவிலிருந்து மக்களை மீட்போம் – யாழில் கையெழுத்து வேட்டை

4 days ago

சர்வதேச ஆதரவை திரட்டுவதில் ரணில் தீவிரம்!

2 days ago

72 வயது முதாட்டியை வன்புணர்ந்த இளைஞருக்கு வலை!

5 days ago

மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

5 days ago

இலங்கை மீண்டெழும் – அமெரிக்கா நம்பிக்கை

5 days ago

‘நெருக்கடி உச்சம்’ – இலங்கையில் அவசரமாக மூடப்படும் பாடசாலைகள்!

2 days ago

‘கோ ஹோம் கோட்டா’ – ஆட்டத்தை ஆரம்பித்தது சஜித் அணி!

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

கோட்டாவின் அதிகாரங்களை குறைத்து பஸிலுக்கு ஆப்பு வைக்கும் ’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தயார்!

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
May 20, 2022

” அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் முன்வைக்கப்படும்.” – என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமானம் செய்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பிற்பகல் வேளையில் நீதி அமைச்சில், தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்காக 21 ஆவது திருத்தச்சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

” 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனநாயக முறைமை ஏற்படுத்தப்பட்டது. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அது இல்லாது செய்யப்பட்டது. எனவே, அரசமைப்பில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.” – என்றும் விஜயதாச குறிப்பிட்டார்.

’19’ இன் நிலை மீண்டும் ஏற்பட்ட பிறகு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறைமை பலப்படுத்தப்படும்.

உயர்பதவி நியமனங்களுக்கான அரசியலமைப்பு பேரவை மீள ஸ்தாபிக்கப்படும். ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பது தடைபடும்.

அதேவேளை, இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இரட்டை குடியுரிமை உடைய பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக இந்த சரத்து 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டது. பஸில் எம்.பியானார். அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.

தற்போது 21 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ‘இரட்டை குடியுரிமை’ தடை மீள அமுலாகும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பஸில் ராஜபக்சவின் எம்.பி. பதவியும் பறிபோகும் நிலை ஏற்படும்.

2015 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்க, 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரட்டை குடியுரிமை உடையவர் என்பதால், உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக எம்.பி. பதவியை இழந்தார். அதே நிலை பஸிலுக்கு ஏற்படும் என்பதே நீதி அமைச்சரின் தர்க்கமாகும்.

ஆர்.சனத்

Related

பரிந்துரை

7 நாட்களுக்குள் இருவரை திருமணம் செய்த ஆசிரியை

1 day ago

எரிபொருளை பதுக்கிய 768 பேர் கைது!

7 days ago

திங்கள் முதல் வவுனியாவில் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை முன்னெடுப்பு!

3 days ago

ராஜபக்சக்களை விரட்ட எதிரணிகளுக்கு சம்பிக்க அழைப்பு

2 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!