'அகதி படகு' - ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை!

Politics 1 வருடம் முன்

banner

இலங்கையிலிருந்து, சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றிவரும் படகு தொடர்பில் , ஆஸ்திரேலியா எல்லை பாதுகாப்பு ஏஜென்சி கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.

குறித்த படகு தற்போது ஆஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே வந்து கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் சிலர் சட்டவிரோதமாக, கடல் வழியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத அகதிகளை ஏற்றி வரும் படகு தொடர்பில், நாட்டிலுள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எல்லை பாதுகாப்பு ஏஜென்சி அறிவித்துள்ளது.