ஆஸியின் புதிய பிரதமரிடமும் கையேந்தும் இலங்கை! 'ஐஸ்' வைத்தார் கோத்தா!!

Politics 1 வருடம் முன்

banner

ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்தோணி அல்பானீஸ்சுக்கு, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.





இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு, புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழில்கட்சி வெற்றிபெற்றது. மொரிஸனின் கூட்டணி மண்கவ்வியது.





இதனையடுத்து 31 ஆவது பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளார்.





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. மறுபுறத்தில் கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.





எனவே, ஆஸ்திரேலியாவில் அமையவுள்ள புதிய அரசிடமும், கொழும்பு உதவிகளை கோரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால்தான் முந்தியடித்துக்கொண்டு ஜனாதிபதி கோட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





மொரிசனின் அரசும், இலங்கைக்கு உதவிகளை வழங்கியதுடன், அகதிகள் விவகாரத்தில் இறுக்கமான போக்கை கடைபிடித்தமை குறிப்பிடத்தக்கது.