பஸிலுக்கு நன்றி சொன்ன தம்மிக்க பெரேரா!

Politics 1 வருடம் முன்

banner

" பிரச்சினைகள் இருப்பதால்தான் நாடாளுமன்றம் வந்தேன். எனவே, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழுமையாக முயற்சிப்பேன். இணைந்து பயணிப்பதே சிறப்பு. எனவே, எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்."





இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா இன்று தெரிவித்தார்.





" போர் காலத்தில் முதலீட்டு சபையின் தலைவராக இருந்தேன். சவால்களுக்கு மத்தியில் முதலீடுகளை கொண்டுவந்தேன். தற்போதும் என்னால் முடியும் என நம்புகின்றேன். " எனவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார்.





தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை விட்டுக்கொடுத்த பஸில் ராஜபக்சவுக்கும் தம்மிக்க பெரேரா நன்றி தெரிவித்தார்.