அதிருப்தியில் மக்கள் - அரசின் செல்வாக்கு மேலும் சரிவு!

banner

அரசின் நடவடிக்கைகளுக்கு மூன்று சதவீத மக்களே ஆதரவளிப்பதாக "வெரிட்டே ரிசர்ச்" நிறுவனம் தெரிவித்துள்ளது.





"நாடு சிந்திக்கும் விதம்" என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடளாவிய மக்கள் கருத்து கணிப்பின் போது வெளிவந்த விடயங்களை வெளியிட்டு "வெரிட்டே ரிசர்ச்" நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.





இந்தக் கருத்து கணிப்பின்படி அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் கிடைத்த 10 சதவீத ஆதரவு இவ்வாறு 3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.





நாட்டில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைகின்றீர்களா? என்பது குறித்தும் இந்த மக்கள் கருத்துக்கணிப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.





ஜூன் மாதத்தில் மக்கள் கருத்தின் படி 2 சதவீதமானோர் அரசின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளனர்.





2022 ஜனவரி மாதம் இது 6 சதவீதமாக இருந்துள்ளது.