இலங்கையில் தொழிற்சாலைகளும் முடங்கும் அபாயம்!

Politics 1 வருடம் முன்

banner

தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு இன்னும் சில தினங்களில் எரிபொருள் கிடைக்காவிட்டால் நாடு முழுவதுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்க தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார்.





நாடு முழுவதும் 264 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும்
கம்பெனிகள் மற்றும் உறுப்பினர் அல்லாத சுமார் 250 தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.





சில தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தி இருந்த போதும் இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு போதுமான ஆதரவை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.





இதேவேளை, எரிபொருள் பிரச்சனை காரணமாக தேயிலை கொழுந்தை தொழிற்சாலைகளுக்கு எடுத்து வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





மின்வெட்டு காரணமாகவும் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த லயனல் ஹேரத் வெளிநாட்டு செலவாணியை அதிக அளவில் தேடித்தரும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் உரிய முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.