ராஜபக்சக்களை விரட்ட எதிரணிகளுக்கு சம்பிக்க அழைப்பு

banner

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாவிட்டால் நாட்டில் நெருக்கடி நிலை அதிகரிக்கும் என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.





அத்துடன், நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பம் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





ராஜபக்ச தரப்புக்கு தற்போது 69 லட்சம் பேரின் ஆதரவு இல்லை. 3 வீதமான மக்கள்கூட அவர்களுடன் இல்லை. எனவே, ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அவ்வாறு அவர் பதவி விலகி 24 மணிநேரத்துக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாய்ப்பை நாடாளுமன்றத்துக்கு வழங்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.





அத்துடன், அனைத்து எதிரணிகளும் இதற்காக ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.