பேராபத்தில் வடக்கு கடல் பரப்பு! அமைச்சர் டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி!

banner

" இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." - என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.





" வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. எனவே, எமது கடல் வளத்தை பாதுகாக்க கடற்படையுடன் இணைந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.





" இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலென்பது இன்று நேற்று நடைபெறும் விடயமல்ல, நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றது. இதனை தடுப்பதற்கு இலங்கை கடற்படையினர் தேவையான நடவடிக்கை எடுத்துவருகின்றனர். நேற்றுகூட அத்துமீறிய 12 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை தொடரும்." - எனவும் அமைச்சர் டக்ளஸ் உறுதியளித்தார்.





அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.