சர்வக்கட்சி அரசமைப்பதில் ரணில் தீவிரம் - கூட்டமைப்புடன் இன்று பேச்சு

banner

சர்வகட்சி அரசு ஒன்றை அமைப்பது தொடர்பில் பல்வேறு அரசியல்கட்சிகளுடனான பேச்சுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்தார்.





அரசியல் கட்சிகளுடன் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நேற்று
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றன என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.





சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகள், இளைஞர்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் மிகுந்த நம்பிக்கையுடனும் மற்றும் எதிர்ப்பார்ப்புடனும் உள்ளனர் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.





ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும்
உறுப்பினர்கள் முதற்சுற்று கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரஸ் இரண்
டாவது கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தது.





மூன்றாவது கலந்துரையாடல் தேசியகாங்கிரஸுடன் இடம்பெற்றுள்ளது.அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பி
னர் ஏ.எல்.எம் அதாவுல்லா உள்ளிட்டபிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.





இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி இன்றைய தினம் மேலும் சில அர
சியல் கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இன்றைய கலந்துரையா
டலில் கலந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன என ஜனாதிபதி ஊடக பிரிவுகுறிப்பிட்டுள்ளது.





இதே வேளை, இன்று மாலை நடைபெறும் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்தச் சந்திப்பில் பங்குபற்ற இலங்கைத்தமிழரசுக் கட்சியின் தலைவர்மாவைசேனாதிராஜாவும் அழைக்கப்பட்டார் எனி னும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புசெல்வதற்கான போக்குவரத்து வசதியின்மையால் அவர் கலந்து கொள்ளமாட்டார் எனத் தெரியவந்தது.