ராஜபக்சக்களின் கோட்டைக்கு எம்.பிக்களை தேடிச்சென்ற பிரதமர்!

banner

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.





சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என மொட்டு கட்சி தரப்பில் பிரதமரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி கோட்பாட்டுக்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகினர். எனவே, இந்த இலக்கை அடைய தமது கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என மொட்டு கட்சி எம்.பியொருவர் தெரிவித்தார்.





எம்.பிக்கள், பிரதமரை தேடிச்சென்றே பேச்சு நடத்துவர். எனினும், மொட்டு கட்சி தலைமையகத்துக்கே வந்து அக்கட்சியினருடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.