இலங்கை வரலாற்றில் அதிக பணவீக்கம் பதிவு!

Politics 1 வருடம் முன்

banner

இலங்கை வரலாற்றில்முதன்முறையாகபொருட்களின் விலை அதிகரிப்பு வேகம் அல்லது பணவீக்கம் 50 சதவீதத்தைக் கடந்துள்ளது. இம்மாதம் பண வீக்கம் 54.6. சதவீதமாக அதிகரித்துள்ளது.





உணவுப் பொருட்களின் விலைகள் இம்மாதத்துக்குள் 80 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக குடிசன மற்றும் புள்ளி விவரத்திணைக்களம் அறிவித்துள்ளது.





உணவுப் பொருட்கள் அல்லாதவை மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு 42.4 சதவீதமமாக அதிகரித்துள்ளது.





நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கும் மத்தியில் காய்கறி வகைகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது பண வீக்கத்துக்கு மற்றொரு காரணமாகும்.





அரிசி, மிளகாய், தானிய வகைகள் உட்பட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு அதேபோல் எரிபொருள் விலைகளும் அதிகரித்தது இம்மாத பண வீக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.