இலங்கைக்கான கடன் வசதியை நிறுத்தியது சீனா!

banner

இலங்கையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்ட நிர்மாண பணிகளுக்காக சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கிய கடன் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.





இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட மேலும் சில காரணங்களாலேயே கடன் வசதி இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.





இலங்கையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்ட நிர்மாண பணிகளுக்காக வழங்கி இருந்த 51 மில்லியன் அமெரிக்க டொலர்களையே எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளது.





இதன் காரணமாக 2 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழப்பர் என தெரிவிக்கப்படுகிறது.





அதேபோல் கடவத்த மற்றும் மீரிகமைக்குமிடையே 37 கிலோ மீட்டர்களை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த சுமார் 500 சீனர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.