வடகிழக்கு தமிழ்க் கட்சிகளை வம்புக்கு இழுக்கிறார் ஜீவன்!

Politics 1 வருடம் முன்

banner

வடக்கு, கிழக்கிலுள்ள கட்சிகளை விடவும் மலையகத்தில் உள்ள கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை நிலவுகின்றது - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" வடக்கு, கிழக்கில் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. கொள்கை அரசியல் எனக் கூறிக்கொண்டு, அவர்கள் சுகபோக அரசியல் நடத்துகின்றனர். ஆனால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, பல குடும்பங்களுக்கு நீர் வசதி இல்லை, இப்படி பல பிரச்சினைகள் உள்ளன.





ஆனால் மக்களின் கஷ்டத்தை வைத்து நாம் அரசியல் நடத்துவதில்லை. வடக்கு, கிழக்கு கட்சிகளை விடவும் மலையக கட்சிகளிடையே சிறந்த ஒற்றுமை இருக்கின்றது.





கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன், திகாம்பரம் உள்ளிட்டவர்களை மதிக்கின்றேன். அவர்களுடன் பேசியும் உள்ளேன். நாங்கள் சண்டை பிடிப்பதில்லை. சர்ச்சை என ஊடகங்களே காண்பிக்கின்றன. விமர்சன அரசியலை நான் எதிர்க்கின்றேன்." - என்றார் ஜீவன்.