AustraliaMain NewsPolitics

மெல்பேர்ணில் லேபர் கட்சி எம்.பியின் அலுவலகம்மீது தாக்குதல்

லேபர் கட்சியின் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Josh Burns இன் மெல்பேர்ண் தேர்தல் அலுவலகம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், தீயும் வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

5 பேரடங்கிய குழுவொன்றே தாக்குதலை நடத்தி, வன்முறையில் ஈடுபட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

யூத தேசிய இயக்கம் எனப்படும் சியோனிசம் என்பது பாசிசம் என சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.

யூத நாடாளுமன்ற உறுப்பினரான Josh Burns இன் அலுவலகம்மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவத்தை பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் இலக்கு வைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Back to top button