2032 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான திட்டங்களை குயின்ஸ்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் 2032 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இதற்காக குயின்ஸ்லாந்து மாநில அரசு தயாராகிவருகின்றது.
இதற்கமைய விக்டோரியா பூங்காவில் 63 ஆயிரம் இருக்கைகள்கொண்ட புதிய மைதானமொன்று அமைக்கப்படவுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கப்பா கிரிக்கெட் மைதானம் மாற்றியமைக்கப்படமாட்டாது எனவும், புதிய மைதானமொன்றே நிர்மாணிக்கப்படவுள்ளதெனவும் குயின்ஸ்லாந்து மாநில பிரீமியர் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகளால் உலகின் பார்வை குயின்ஸ்லாந்து பக்கம் திரும்பும் என்பதால் மாநிலத்துக்கு பொருளாதார ரீதியில் நன்மைகள் கிடைக்கப்பெறக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.