ஆஸ்திரேலியாவில் அதிகளவு சனத்தொகையைக்கொண்ட நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து அடுத்த வருடம் சுமார் 24 ஆயிரத்து 300 பேர் குடிபெயர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2025 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் மாநிலங்களுக்கிடையிலான இடம்பெயர்வு தொடர்பான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் வெளியேறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
நியூ சவூத் வேல்ஸிலிருந்து பெரும்பாலானவர்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆகிய மாநிலங்களில் இருந்து குடிபெயர்வு இடம்பெறவுள்ளது. விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது.
2025 - 2026 நிதியாண்டில் வெளிநாட்டு இடம்பெயர்வை 65 ஆயிரத்தால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.