பசுமைக் கட்சித் தலைவர் ஆடம் பேண்ட் புதன்கிழமை அடலெய்றில் முன்னாள் தலைவர் பாப் பிரவுனுடன் இணைந்து கட்சியின் "பசுமை ஆஸ்திரேலியாவிற்கான திட்டத்தை" தொடங்குவார் என்று தெரியவருகின்றது.
சுற்றுச்சூழலுக்கு கூடுதலாக $17 பில்லியன் செலவிட வலியுறுத்த வேண்டும் என்ற உறுதி மொழிக்கமைவாக பசுமைக் கட்சியின் 2025 தேர்தலுக்கான இந்தக் கொள்கை வெளியீடு அமைந்துள்ளது. இது தற்போதுள்ள $13.3 பில்லியனை விட அதிகமாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி ஆரோக்கியமான சூழலையும், இயற்கையை கவனித்துக்கொள்வதையும் சார்ந்துள்ளது என்று பசுமைக் கட்சியின் சுற்றுச்சூழல் செய்தித் தொடர்பாளர் சாரா ஹான்சன்-யங் கூறினார்.
பல்லுயிர் மறுசீரமைப்பிற்காக அடுத்த பத்தாண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை செலவிடுவதற்கான உறுதிமொழியும் உள்ளது.
"கிரீன்ஸ் கட்சியினர் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் சட்டங்களை சீர்திருத்தவும், பூர்வீக காடுகளை வெட்டுவதை நிறுத்தவும், கோலா பழக்கங்களை அகற்றுவதற்கு தடை விதிக்கவும் விரும்புகிறார்கள். என்று திருமதி ஹான்சன்-யங் கூறினார்.
"பெரிய நிறுவனங்கள் மற்றும் பில்லியனர்கள்" மீதான வரிகளை அதிகரிக்கும் திட்டத்தின் மூலம் கூடுதல் முதலீடு நிதியளிக்கப்படும் என்று பசுமைக் கட்சியினர் கூறுகின்றனர், இது 10 ஆண்டுகளில் $514 பில்லியன் வருவாயை திரட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கிரீன்ஸ் கட்சியினர் தற்போது கீழ்சபை குறுக்கு பெஞ்சில் 19 இடங்களில் நான்கு இடங்களையும், செனட்டில் 11 இடங்களையும் வைத்திருக்கின்றனர்.
சபா.தயாபரன்