காப்புறுதியை பெறுவதற்காக தனது தாயை கொலை செய்த பேர்த்தை சேர்ந்த மகனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
29 வயதான ஆண்ட்ரே ரெபெலோ என்பவருக்கே மேற்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தால் இத்தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.
2020 மே 20 ஆம் திகதியே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு 58 வயதான தனது தாயை கொன்றுவிட்டு, அவர் இயற்கையாக மரணமடைந்துவிட்டாரென போலி ஆவணங்களை தயாரித்து காப்புறுதியை பெற முற்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளியென நீதிமன்றம் கடந்த டிசம்பரில் கண்டறிந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.