குயின்ஸ்லாந்தில் உள்ள Fraser தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த மூன்று யுவதிகள் டிங்கோ தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
டிங்கோ கடிக்கு இலக்கான மூவருக்கும் குயின்ஸ்லாந்து அவசர சேவை பிரிவினரால் முதலுதவி வழங்கப்பட்டது. அவர்கள் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.
ஈஸ்டர் பாடசாலை விடுமுறை நெருங்கி வருகின்றது. குறித்த விடுமுறை காலத்தில் Fraser தீவுக்கு பெருமளவானோர் சுற்றுலா செல்வார்கள்.
எனவே, டிங்கோ தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிங்கோவுக்கு உணவளிக்க முற்பட வேண்டாம் எனவும், பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.