காசாவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவன ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலை, ஆஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
காசாவில் தொண்டு நிறுவன ஊழியராக பணியாற்றிய சோமி பிராங்கோம் என்ற ஆஸ்திரேலிய பெண், இஸ்ரேல் வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவர் இவ்வாறு கொல்லப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் பொறுப்பு கூறல் அவசியம் என்பதை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மீண்டும் வலியுத்தியுள்ளார்.
வெளிப்படையான விசாரணைக்கான அழுத்தங்கள் தொடரம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
காசாவில் மனிதாபிமான பணியாளர்களை பாதுகாப்பதற்காக சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியா செயல்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.